சீர்காழியில் அறிவியல் கண்காட்சியில் 30 மாணவர்களின் படைப்பு போலீஸ் எஸ் பி தொடங்கி வைத்தார்
சீர்காழி, செ.ப்15: சீர்காழி பள்ளியில் அறிவியல் கண்காட்சி மயிலாடுதுறை எஸ் பி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் கண்காட்சி நடைபெற்றது. மயிலாடுதுறை எஸ் பி ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்று இருந்தன சிறப்பான அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர் பிரவீன் வசந்த் ஜெபேஸ், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டன முடிவில் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் கூறினார்