கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
நாகப்பட்டினம், அக்.14: வருகிற தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பாக ஒன்றிய அரசு அறிவித்தள்ள அகவிலைப்படியை தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்ககோரி நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தார். செயலாளர் தர் வரவேற்றார். பொருளாளர் அந்துவன்சேரல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை மாநில அரசு வரும் தீபாவளி பண்டிகை காலத்திற்குள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Advertisement