நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
Advertisement
வேதாரண்யம்,அக்.10: வேதாரண்யத்தில் நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேதாரண்யம் நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேதாரண்யம் நகர திமுக செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேதரத்தனம், காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் மறைமலை, நகர அவை தலைவர் கணேசன், நகர பொருளாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், பாக நிலை மூகவர்கள், பாக முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாக நிலை முகவர்களுக்கும், பாக முகவர்களுக்கும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.
Advertisement