முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
கிருஷ்ணகிரி, ஜூலை 11: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்ஜிஆர் நகரில், முத்துமாரியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவினையொட்டி மேளதாளம், பம்பை முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது. எம்ஜிஆர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்கதர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.