பல்நோக்கு சமுதாயகூடம் திறப்பு விழா
காரிமங்கலம், ஜூன் 20: காரிமங்கலம் ஒன்றியம், மொட்டலூர் ஊராட்சி எச்சனம்பட்டி கிராமத்தில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, பல்நோக்கு சமுதாயக் கூடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில், யூனியன் சேர்மன் சாந்தி பெரியண்ணன், துணை சேர்மன் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வக்கீல் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement