ஓரணியில் தமிழ்நாடு’ வீடுவீடாக சென்று திமுகவில் இணைய முபாரக் அழைப்பு
குன்னூர், ஜூலை 11: திமுக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026ம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம், 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கிருஷ்ணாபுரம் பகுதியில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்து, திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
குன்னூர் திமுக நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச்செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணைத்தலைவருமான வாசிம்ராஜா, கிளைக்கழக செயலாளர் ரஹீம், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன் மற்றும் திமுக நிர்வாகிகளான பரிமளா, வசந்தகுமார், வடிவேல், ரவி, ராதா, வேணி, நித்திஷ்குமார் உட்பட அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு திமுக சாதனைகளையும், அதன் சிறப்புகளையும் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.
பச்சை பசேல் என மாறியது