தெரு நாய்களுக்கு உணவளித்த தாய், மகளுக்கு கொலை மிரட்டல்
மதுரை, ஜூலை 23: மதுரையில் தெரு நாய்களுக்கு உணவளித்த இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுரை புதுநத்தம் ரோடு பாரதிநகரை சேர்ந்தவர் ஆர்த்தி(41). இவர் தனது மகளுடன் அய்யர் பங்களா பகுதிக்கு சென்றார். அங்கு சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் உள்ளிட்டோர் சேர்ந்து நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாய், மகள் இருவரையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வடக்கு துணை கமிஷனர் அனிதாவிடம் ஆர்த்தி புகார் கொடுத்தார். அவர் உத்தரவின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.