தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங். வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரியில் நாளை பிரசாரம்

நாகர்கோவில், ஏப்.10: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, திமுக இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் மற்றும் திறந்தவெளி வாகன பிரசாரம் மூலம் வாக்குகள் சேகரித்து வருகின்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ‘இந்தியா’ கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்-க்கு வாக்குகள் சேகரிக்க வருகிற 11ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு வடசேரி, அண்ணா சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாகன பிரசார கூட்டத்தில் பங்கேற்று எழுச்சி உரையாற்ற உள்ளார்.

Advertisement

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுகவினர், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை வரும் அவருக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் குழித்துறையில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்டை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

Advertisement

Related News