அரியலூர் நகராட்சி பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்
அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்று துவக்கி வைத்தார்.
அதன்படி அரியலூர் நகராட்சி வார்டு 2-க்குட்பட்ட சத்யாநகர் பகுதியில் ரூ.11.39 லட்சத்தில்328 மீ சாலை அமைக்கும் பணியை, ரூ.21.62 லட்சத்தில் 328 மீ மழைநீர் வடிகால் அமைக்கும் பண, பெரியார் நகர் 6-வது வார்டில் ரூ.4.26 லட்சத்தில் ஆழ்துளை கிணறு செயல்பாட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். தொடர்ந்து, அழகப்பா நகர் 2-வது தெருவில் ரூ.6.25 லட்சத்தில் 180 மீ சாலை அமைக்கும் பணி, அழகப்பா நகர் 3-வது தெருவில் ரூ.5.52 லட்சத்தில்179 மீ சாலை அமைக்கும் பணி, பின்னர், 8வது வார்டு கருத்தான்தெருவில் ரூ.7.07 லட்சத்தில்172 மீ சாலை அமைக்கும் பணி, தொடர்ந்து ரூ.287 லட்சத்தில் காந்தி மார்க்கெட் புதிய கட்டடம் கட்டும் பணியை துவக்கி வைத்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வார்டு எண்.11, செல்லமுத்து தெருவில் ரூ.7.16 லட்சத்தில் 220 மீ சாலை, புதுத்தெருவில் ரூ.6.29 லட்சத்தில்153 மீ சாலை , தொடர்ந்து, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.216 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் .வார்டு எண்.14 சஞ்சீவிராயன் கோயில் தெருவில் ரூ.9.77 லட்சத்தில் 300 மீ சாலை அமைக்கும் பணி, சிட்டிபாபு தெருவில் ரூ.8.32 லட்சத்தில் 270 மீ சாலை அமைக்கும் பணி, வார்டு எண்.13 பெருமாள் கோவில் தெருவில் ரூ.7.19 லட்சத்தில்233 மீ சாலை , தொடர்ந்து வார்டு எண்.14 கைலாசநாதர் கோவில் தெருவில் ரூ.8.19 லட்சத்தில்220 மீ சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
வார்டு எண்.11, விளாங்காரத் தெருவில் ரூ.3.76 லட்சத்தில்122 மீ சாலை , தொடர்ந்து ரூ.8.79 லட்சத்தில்விளாங்காரத் தெருவில் 122 மீ மழைநீர் வடிகால் வாய்க்கால், பின்னர், வார்டு எண்.8, சபாபதி தெருவில் ரூ.5.7 லட்சத்தில்175 மீ சாலை , சாம்பசிவம் தெருவில் ரூ.9.44 லட்சத்தில் சாலை, சீனிவாசன் தெருவில் ரூ.2.18 லட்சத்தில் 67 மீ சாலை, குறிஞ்சான்குளத் தெருவில் ரூ.7.05 லட்சத்தில்203 மீ சாலை,
வார்டு எண்.12, மேல அக்ரஹாரம் தெருவில் ரூ.16.64 லட்சத்தில்405 மீ சாலை, ரூ.13.43 லட்சத்தில்மேல அக்ரஹாரம் தெருவில் 436 மீ சாலை, ரூ.13.35 லட்சத்தில்மேல அக்ரஹாரம் குறுக்கு தெருவில் 410 மீ சாலை, மேல அக்ரஹாரம் தெருவில் (குபேரன் நகர்) ரூ.13.35 லட்சத்தில் 214 மீ சாலை ஆகிய பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல வார்டு எண்.13, எஸ்.ஆர்.நகரில் ரூ.23.82 லட்சத்தில்300 மீ சாலை, வார்டு எண்.16, கல்லக்குடி தெருவில் ரூ.14.71 லட்சத்தில்332 மீ சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். வார்டு எண்.16 கண்ணுசாமி தெருவில் ரூ.4.26 லட்சத்தில்அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு செயல்பாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து மின்நகரில் ரூ.34.08 லட்சத்தில்1105 மீ சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். இதில் அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார், அரியலூர் நகர்மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி, அரியலூர் நகராட்சி பொறியாளர் (பொ) ராஜகோபாலன், திமுக நகரச் செயலாளர் முருகேசன் , திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு , திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண்ராஜா, திமுக மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் தங்கை எழில்மாறன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர் ,அரியலூர் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.