உலகளாவிய திறமைகளை உருவாக்க வேண்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
கோவை, ஜூலை 15: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) கோவை தனியார் ஓட்டலில் ஜிசிசி உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பல்வேறு செயல்பாடுகளில் பணியாற்றக்கூடிய மற்றும் உலகளாவிய தளங்களுடன் எளிதாக ஒருங்கிணைக்கக்கூடிய திறமைகளை உருவாக்க வேண்டும். அத்தகைய திறமைகளை நாம் எவ்வளவு அதிகமாக உருவாக்கிறோமோ, அந்த அளவுக்கு கோவை உலகளாவிய நிறுவனங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும்.
இந்த மாநாடு இப்போது டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுடன் எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது’’ என தெரிவித்தார். கோவை சிஐஐ, ஜசிசி., பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் ராமசாமி கூறும்போது, ‘‘கோவை போட்டித்தன்மையுடனும் எதிர்காலத்திற்கு தயாராகவும் இருக்கிறது. உயர் மதிப்புள்ள வேலைகளில் கவனம் செலுத்தும் பல தரப்பட்ட மையங்களை உருவாக்க இது ஒரு வலுவான தளத்தை வழங்குகிறது’’ என்றார்.