சி.வ.அரசு பள்ளியில் ₹2 கோடியில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி, ஜூன் 14: தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் ₹2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டுமான பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாநகரில் உள்ள சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ₹2 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடப் பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராகுல், உதவி பொறியாளர் ரேணுகா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement