ஒட்டன்சத்திரம் கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கு
ஒட்டன்சத்திரம், ஜூலை 7: திண்டுக்கல் மாவட்டம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக, மைக்ரோ ஆண்டன்பெஸ்ட் கருத்தரங்கம் தாளாளர் மருத்துவர் வேம்பணன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் தேன்மொழி, துறை தலைவர் சிவகாமி துவக்கி வைத்தனர். கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இளம் விஞ்ஞானி ரங்கீஷ் கடல், கடற்கரை அமிலமயமாக்கல் குறித்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கினை உதவி பேராசிரியர் சிவரஞ்சனி மற்றும் மாணவிகள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
Advertisement
Advertisement