தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் மே 27ம் தேதி வரை நீட்டிப்பு தென்னக ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம்,ஏப்.4:மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்களன்று காலை மேட்டுப்பாளையம் வந்தடையும்.மீண்டும் இந்த ரயில் திங்களன்று இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாயன்று திருநெல்வேலியை சென்றடையும். இந்நிலையில் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் நேற்று முன்தினம் வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ரயிலின் சேவை மீண்டும் வரும் மே 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

Advertisement

இந்த ரயிலானது ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம்,கீழக்கடையம்,பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி,விருதுநகர், மதுரை,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர்,கோவை சந்திப்பு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட உள்ளது.

Advertisement