தீ விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்
ஆண்டிபட்டி, ஜூலை 9: தீ விபத்துகளை தடுக்கும் முறை குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கூறியதாவது, ‘‘வீட்டில் உள்ள பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். முற்றிலும் அணையாத தீக்குச்சிகளை குப்பை கூடையில் போடக்கூடாது. பொருட்களை அடுப்பை தாண்டி எட்டி எடுக்கும் வகையில் வைக்கக் கூடாது. சமையல் செய்யும்போது செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து, பருத்தி மேலாடைகளை அணிய வேண்டும். தீக்குச்சி அல்லது லைட்டரை எரியும் நிலையில் வைத்து சிலிண்டர் வால்வை திறக்க வேண்டும். பர்னரின் உபயோகம் தேவையில்லை எனில் அதன் வால்வு சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ரப்பர் குழாயை அடிக்கடி விரிசல் மற்றும் துளைகள் ஏற்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். இரவில் சிலிண்டர் வால்வை அவசியம் மூட வேண்டும். மாற்றுச் சிலிண்டர் வாங்கும் போது வாயுக்கசிவு உள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்’’ என்றனர்.