தூத்துக்குடி அண்ணாநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மருத்துவ முகாம்
தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி அண்ணாநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மருத்துவ முகாம் நடந்தது. தூத்துக்குடி அண்ணாநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத் தந்தை ரஞ்சித்குமார் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் தலைவர் ஜெயந்தி ஹெலன், அருட்தந்தை பெஞ்சமின், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்கையா முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற மக்களுக்கு வாத நோய், நீரிழிவு நோய், தோல் வியாதி, உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை, மலர் மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், பிசியோதெரபி மருத்துவம், அரோமா சிகிச்சை, வர்மசிகிச்சை, விதை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இயற்கை மருத்துவர் ஜெகன், ஹோமியோபதி மருத்துவர் ஆதித்யா, பிசியோதரபி மருத்துவர் மைக்கேல் ஜான் ஜெயகர் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.