நாகர்கோவிலில் புதிய ரேஷன்கடை கட்டிடம் மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
நாகர்கோவில், ஆக.30: நாகர்கோவில், மாநகராட்சி, வட்டவிளையில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் விஜயகுமார் நிதி ஒதுக்கீட்டில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிட திறப்புவிழா நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, வார்டு உறுப்பினர் அனிலா சுகுமாரன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி மற்றும் திமுகவை சேர்ந்த அகஸ்தீசன், அதிமுகவை சேர்ந்த சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement