மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா
மயிலாடுதுறை, ஜூலை 4: மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சங்கத்தின் மாவட்ட முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேலு கலந்து கொண்டு மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்கத்தின் 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவர் கோபால்ராஜ், செயலாளர் வக்கீல் ஜெகதராஜ், பொருளர் மணி ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை ஏற்ற புதிய பொறுப்பாளர்கள், தங்களது பணியை திறம்பட செய்வதாக உறுதியளித்தனர்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகவேல் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராஜகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார். விழாவை முன்னிட்டு கடந்த அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன. மேலும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் நகர் மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ், சங்கத்தின் வட்டார தலைவர் அழகு மாணிக்கம், நிர்வாகிகள் சரவணன், அன்பழகன் மற்றும் சங்க முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.