கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
நாமகிரிப்பேட்டை, செப்.28: ராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(60), கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் அணைப்பாளையம் ஏரி அருகே உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜின் சடலத்தை மீட்டனர். ராசிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement