பட்டாசு லோடு ஏற்றி சென்றவர் கைது
சிவகாசி, ஜூன் 21: சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு லோடு ஏற்றி சென்றவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே விஸ்வநத்தம் சாலையில் டவுன் எஸ்ஐ அய்யனார் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி 20 அட்டை பெட்டிகளில் பலவிதமான பட்டாசுகள் இருந்துள்ளது. அரசு அனுமதியில்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் வாகனத்தில் பட்டாசு பெட்டிகளை கொண்டு சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியை சேர்ந்த ஜோதிமணி மகன் கிருபைதாஸ்(26) என்பவரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement