கழுகுமலை அருகே போலீசாரை மிரட்டியவர் கைது
Advertisement
கழுகுமலை, மே 30: கே.வெங்கடேஸ்வரபுரத்தில் காளியம்மன் கோயில் கொடை கொடை விழா கரகாட்ட நிகழ்ச்சியில் வேல்ராஜ் (35) என்பவர் ஆபாசமாக பேசி நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. போலீசார், வேல்ராஜை கண்டித்துள்ளனர். அவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து வேல்ராஜை கைது செய்தனர்.
Advertisement