சேலம், ஜூலை 19: சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் நாகரத்தினம் (26). இவர் கடந்த 14ம் தேதி நண்பர் கவுதம் வீட்டின் முன்பு 2லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை நிறுத்தியிருந்தார். அந்த பைக்கை மர்மநபர் திருடிச்சென்றுள்ளார். இதுபற்றி நாகரத்தினம் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பொன்னமாபேட்டை அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த டோரிக்கண்ணன்(எ)இப்ராகீம்(27) என்பவர் தான் பைக்கை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பைக்கை மீட்டனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.