தோகைமலை அருகே மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது
Advertisement
தோகைமலை, ஜுன் 19: தோகைமலை அருகே மது பாட்டில் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி முத்தப்பட்டி பச்சமுத்து மகன் சாமிநாதன் (45) இவர், தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்துள்ளார்.
தகவலறிந்த தோகைமலை போலீசார், அந்த பகுதிகளில் தீவிர ஆய்வு செய்தனர். அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சாமிநாதனை கைது செய்தனர்.
Advertisement