காரைக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
காரைக்குடி, ஜூன் 8: காரைக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி புதுசந்தை பேட்டை என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி பிரகாஷ் உத்தரவின்படி எஸ்ஐ வீரபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
Advertisement
அப்போது வீட்டில் ஒரு பூந்தொட்டியில் 100 செமீ நீளம் கிளைகளுடன் கூடிய கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்தனர். இதில், 22 கிராம் எடை கொண்ட கஞ்சா இலைகள் இருந்தன. இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து, ராஜேந்திரனை கைது செய்தனர். விசாரணையில் ராஜேந்திரன் தேனி பகுதியில் இருந்து கஞ்சா செடி வாங்கி வந்து வளர்த்தது தெரியவந்தது.
Advertisement