வியாபாரியை ஸ்குரூ டிரைவரால் தாக்கியவர் கைது
கிருஷ்ணகிரி, ஜூன் 10: ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்தவர் மனோகரன்(36). முடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியின் அண்ணன் மணிகண்டன்(36). மனோகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் கேட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், மணிகண்டன் தரப்பினர், மனோகரனை ஸ்குரூ டிரைவரால் வயிற்றில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மனோகரன் கொடுத்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement