மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்
Advertisement
மேலும், 7 அடி உயரத்துக்கு கடல் அலைகளின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலுக்குள் அலைகளின் சீற்றம் அதிகரித்ததால், மாமல்லபுரம் உள்பட சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் பல அடி தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்ததால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்தனர். இதனால், தங்களின் படகு மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான வைத்துள்ளனர். தற்போது, மாமல்லபுரத்தை பொறுத்தவரை வெயில் வாட்டி வதைத்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மேலும், கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இருந்து கோவளம் கடற்கரை வரை கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
Advertisement