கொத்தனார் விஷமருந்தி தற்கொலை
மதுரை, ஆக. 30: மதுரை அருகே பெருங்குடி சங்கையா கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(50). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் போனதால் இவருக்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்றுவலி அதிகமானதாக தெரிகிறது.
Advertisement
இதனால் வேதனையடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தார். தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement