பாரத ஸ்டேட் வங்கி சார்பில் செயல் விளக்க திட்ட முகாம்
அலங்காநல்லூர். ஆக. 29: பாலமேடு அருகே ராஜக்காள்பட்டி கிராமத்தில், பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் ஊரகப்பகுதி வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு செயல்விளக்க திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை நான்காம் மண்டல மேலாளர் மதன் தலைமை தாங்கினார். நிதி மேலாண்மை மேலாளர் ரம்யா முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் தனபால விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சேமிப்பு கணக்கு துவங்குதல் மற்றும் பழைய கணக்குகளை புதுப்பித்தல், பிரதமரின் திட்டமான PMSBY, PMJJBY, PMJDY, APY ஆகியவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வேளாண் காப்பீடு சேமிப்பு உள்ளிட்ட பாரத பிரதமர் வருவாய் திட்டத்தில் சேருவதற்கான படிவங்கள், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், வாடிக்கையாளர் சேவை மைய பொறுப்பாளர் தவமணி நன்றி கூறினார்.