பிரசார பயணத்திற்கான அழைப்பிதழுடன் அதிமுகவினர் சாமி தரிசனம்
மதுரை, ஆக. 27: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக செப். 1ம் தேதி துவங்கி 4 நாட்களுக்கு மதுரையில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கான அழைப்பிதழை வைத்து அதிமுகவினர் சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள வணிக வளாகங்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி அழைப்பு விடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மதுரையில் செப்.1 துவங்கி எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் செய்கிறார். இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன், சுவாமிக்கு அழைப்பிதழ்களை வைத்து சாமி தரிசனம் செய்துள்ளோம்’’ என்றார்.
Advertisement