பராமரிப்பு பணிகள் நிறைவு; திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்தது: பயணிகள் உற்சாகம்
திருமங்கலம், செப். 26: பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே மாதம் மூடப்பட்ட திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் பெரியதாக இருக்கும் திருமங்கலத்தில், கடந்த 50 ஆண்டுகளாக மதுரை மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது.
Advertisement
திருமங்கலத்திலிருந்து மதுரை நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் உசிலம்பட்டி, சோழவந்தான், விருதுநகர், காரியாபட்டி, கள்ளிக்குடி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நிமிடத்திற்கு மூன்று டவுன் பஸ்கள் புறப்படும் இந்த பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே 5ம் தேதி மூடப்பட்டது.
Advertisement