ரூ.27 லட்சம் மின் சாதனங்கள் திருட்டு
பேரையூர், செப். 26: சேடபட்டி அருகே அல்லிகுண்த்தை சேர்ந்தவர் சின்னமூக்கன். இவரது விவசாய தோட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைத்துள்ளனர். அதற்கு கடந்த 2009ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தோட்டத்து உரிமையாளருக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் வாடகை பணத்ை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் அலைக்கற்றை நிறுவனம் நஷ்டமடைந்ததால், டவரின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2022ல், இந்த டவருக்கு பயன்பாட்டில் இருந்த டீசல் ஜெனரேட்டர், பேட்டரி, மற்றும் மின்சாதனப்பொருட்கள் என ரூ.27 லட்சத்து, 73 ஆயிரத்து, 672 மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நிறுவன பொறுப்பாளரான சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் பேரையூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவில் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த திருட்டு குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.