கிரிக்கெட் மைதானத்தில் வாலிபர் மயங்கி விழுந்து சாவு
Advertisement
மதுரை, நவ. 25: மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீ ராம் நகர் மகிழம்பூ தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன் மகன் விஷ்ணுவர்தன் (26). இவர் குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மண்டேலா நகரில் பாலாஜி நகரில் உள்ள விளையாட்டு திடலில் கிரிக்கெட் போட்டி விளையாடுவது வழக்கம். அது போல இந்த வாரமும் 40 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. தண்ணீர் குடிப்பதற்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement