முன்னாள் படை வீரர்களுக்கு சட்ட உதவி
மதுரை, செப். 25: மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுகிறது. இதன்படி அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக, வாரந்தோறும் புதன்கிழமைகளில் இலவச சட்ட உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
இதன் மூலம் தொழில் ரீதியான பிரச்னைகள், சட்ட ஆலோசனை வேண்டுதல், குடும்ப நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து தொடர்பான இழப்பீடு பெறுதல் மற்றும் அனைத்து விதமான சட்டம் சார்ந்த பிரச்னைகளுக்கும் இம்முகாமில் விண்ணப்பம் செய்து தீர்வுகளைப் பெறலாம். இத்தகவலை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.
Advertisement