கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மதுரை, அக். 24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில், நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் கோரிக்கை விளக்கவுரை வழங்கினார். மதுரை மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் முனியசாமி துவக்கவுரை நிகழ்த்தினார். மூட்டா பார்த்தசாரதி நிறைவுரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் சோலையன், மனேகரன், மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஜூலை 7 முதல் முன் தேதியிட்டு, 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு அறிவித்திட வேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் தனியார் பல்கலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் ஆகிய 2 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.