ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக. 23: அனைத்து தொழிற்சங்கள் சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து அண்ணா நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு இந்து மஸ்தூர் சபா மாவட்ட தலைவர் முத்துலிங்கம் தலைமை வகித்தார். இதில் அமெரிக்காவின் சுங்க மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது.
Advertisement
இந்தியா, இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் ஒன்றிய அரசு தாரை வார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement