செல்போன் திருடிய வாலிபர் கைது
மதுரை, நவ. 21: விருதுநகர் பாட்டம் புதூர் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மாதவமூர்த்தி (49). போர்வெல் லாரி டிரைவரான இவர், மதுரையை அடுத்த மூன்றுமாவடி பெட்ரோல் பல்க் பின்புறம் லாரியை நிறுத்தி விட்டு தூங்கினார். அப்போது மர்மநபர் மாதவ முர்த்தியின் இரண்டு செல்போன்களை திருடிச்சென்றார்.
Advertisement
இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் உதவியுடன், புதூர் பாரதியார் 1வது தெருவை சேர்ந்த கங்காதரன்(32) என்பவரை கைது செய்து, செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Advertisement