சிஐடியு தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
மதுரை, ஆக. 20: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சஙகம் சிஐடியு, விரைவு பணிமனை கிளை, மதுரை மண்டல ஓய்வு பெற்ற அமைப்பு மற்றும் விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்ற அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் முதல் மதுரை மண்டல போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்த போராட்டத்தில் சிஐடியு மதுரை மண்டல பொதுசெயலாளர் அழகர்சாமி, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்க மதுரை மண்டல பொது செயலாளர் வாசுதேவன் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சென்னையில் சங்கத்தின் மாநில தலைவர் சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் புதிதாக எந்த கோரிக்கை வைக்கவில்லை ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கைகளை தான் நிறைவேற்ற வேண்டும் எனவும், அரசு காலம் கடத்தி வரும் நிலையில் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கி போக்குவரத்து தொழிலாளர்கள் செல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் கூறினர்.