அரசு பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆய்வு
மதுரை, நவ. 19: மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களின் கல்வித்தரம், உணவின் தரம் குறித்தும், பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கம், உட்கட்டமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
Advertisement
ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கார்மேகம், முன்னாள் உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் தென்னவன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் மாணவர்கள் பறை இசைத்து வரவேற்பு அளித்தனர்.
Advertisement