மீனாட்சி அரசு கல்லூரியில் பட்டப் படிப்புகளில் மாணவியர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு
மதுரை, செப். 19: மதுரையில் உள்ள மீனாட்சி அரசு கலைக்கல்லூரியில், காலியிடங்களில் நடைபெறும் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை பணிகள் நடைபெற்றது. இதன் முடிவில் தற்போது பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு மாணவியர் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி பி.ஏ. ஆங்கிலம், வரலாறு (ஆங்கில வழி), பி.எஸ்சி கணிதம் (ஆங்கில வழி), பி.எஸ்சி (தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி) மற்றும் பி.எஸ்சி (தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி) ஆகிய 5 இளநிலை பாடப்பிரிவுகளில் சில காலி இடங்கள் உள்ளன. இதேபோல் முதுநிலை பாடப்பிரிவில் எம்.எஸ்சி தாவரவியல் பாடப்பிரிவிலும் காலி இடங்கள் உள்ளன.
எனவே இந்த பாடப்பிரிவுகளில் சேர விருப்பமுள்ள மாணவிகள் நேரடியாக கல்லூரியின் சேர்க்கை உதவி மையத்தை அணுகி தகுதியுள்ள பாடப்பிரிவுகளில் சேரலாம். மாணவியர் சேர்க்கை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறும். விபரங்களுக்கு கல்லூரி இணையதளம் அல்லது உதவி மையத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.