எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசை கண்டித்து
மதுரை, நவ. 18: மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர்கள் சார்பில், ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு எஸ்ஆர்எம்யூ மதுரை கோட்ட ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார். இதில் மதுரை கோட்ட உதவி செயலாளர் ராம்குமார், செயலாளர் ஜெ.எம்.ரபீக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அப்போது 01.01.2016 முதல் அமல்படுத்தப்பட்ட 7வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் தினப்படி 50 சதவீதம் எட்டும் போது பயணப்படியுடன் கிலோ மீட்டர் படியை அதற்கு ஏற்ற வகையில் உயர்த்த வேண்டும்.
இது நடக்காததால் ஓடும் தொழிலாளர்கள் ஏமாற்றும் அடைந்துள்ளனர். தற்போது 8வது ஊதியக்குழு அமைக்க அரசு உத்தரவிட்ட நிலையில், கி.மீட்டர் படிடிய 25 சதவிகிதம் உடனடியாக உயர்த்த வேண்டும். மேலும், ஒன்றிய அரசின் எல்லா துறைகளிலும் பயணப்படிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஓடும் தொழிலாளர்களின் கி.மீ படிக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களின் வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.