பறவைகளை வேட்டையாடினர் துப்பாக்கியுடன் 3 நபர்கள் கைது
மதுரை, அக். 18: மேலூர் அருகே மருதூரில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனக்குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் மதுரை பிரிவு வனச்சரகர் சிக்கந்தர் பாட்ஷா தலைமையிலானஅதிகாரிகள் சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது, மூன்று பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது.
Advertisement
அவர்களை பிடித்து விசாரித்தபோது திருவாதவூரைச் சேர்ந்த மருதுபாண்டியன் (48), கள்ளந்திரி இளங்கோவன் (60), கொட்டக்குடி செல்லபாண்டி (30) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த அதிகாரிகள், வேட்டையாடப்பட்ட சீழ்கை சிறகி. அன்றில், அரிவாள் மூக்கன், கொக்கு ஆகிய பறவைகளின் உடல்கள், 200 கிராம் துப்பாக்கி குண்டுகள், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Advertisement