சேலையில் தீப்பற்றிய மூதாட்டி சாவு
மதுரை, செப். 18: மதுரையில் உள்ள கோயிலில் சுவாமி கும்பிடும் போது சேலையில் தீப்பற்றி படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை, கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் பத்மகுமரேஸ்வரி(70). இவர் கடந்த செப்.15ம் தேதி மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றார். அங்கு ஆஞ்சநேயருக்கு பூ போட்டுக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த தீபத்தில் இருந்து இவரது சேலையில் திடீரெ தீப்பற்றியது.
Advertisement
இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பத்மகுமரேஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோயில் ஊழியர் சண்முகவேல் அளித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement