பேரையூர் பகுதியில் நீர்வரத்து கால்வாய்கள் பராமரிப்பு
பேரையூர், ஆக. 18: பேரையூர் தாலுகா, நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட நீர்வரத்து சிறிய மற்றும் பெரிய பாலங்கள் வழியாக வரக்கூடிய ஓடை மற்றும் ஆற்றுப் படுகைகளிலுள்ள முட்புதர்கள், செடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்படி பேரையூர் பகுதியில் உள்ள பெரிய பாலத்தின் அடிப்பகுதியில் நடந்த முட்புதர்களை நீக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் பிரேம் ஆனந்த், இளநிலைப் பொறியாளர் சுந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் பருவமழைக்கு முன்பாக முன்னெச்செரிக்கை பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.