டூவீலர் திருடிய வாலிபர் கைது
மதுரை, அக். 16: மதுரை, மேல கைலாசபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்திவிட்டு தூங்கினார். அடுத்தநாள் காலையில் காலை எழுந்தபோது அந்த இரு சக்கர வாகனம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி, பெத்தானியாபுரத்தை சேர்ந்த பாசீத்(20) என்பவரை கைது செய்து, திருடிய டூவீலரை மீட்டனர்.
Advertisement
Advertisement