முதியவர் பிணமாக மீட்பு
Advertisement
மதுரை, அக். 14: மதுரை, கீழவெளிவீதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவர் நடத்தி வரும் சாயப்பட்டறையில் கூலித்தொழிலாளியயாக இருந்தவர் பழனி (60). இவர் வண்டியூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு வராததால், சாயப்பட்டறை தொழிலாளர்கள் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால், வண்டியூர் விஏஓ கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வீட்டின் கதவினை உடைத்து பார்த்தபோது, பழனி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement