சிசிடிவி கேமிராக்கள் பொருத்த காவல் நிலையங்களில் கமிஷனர் ஆய்வு
மதுரை, செப். 13: மதுரை மாநகரில் மொத்தம் 30 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிசிடிவி கேமிராக்கள் இல்லாத காவல் நிலையங்களுக்கு வந்து செல்வோரை கண்காணிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ேகமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது.
Advertisement
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலா 8 சிசிடிவி கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களையும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கேமராக்கள் பொருத்த சரியான இடங்களை பரிந்துரை செய்தார். இதன் தொடர்ச்சியாக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Advertisement