உலக தபால் தினத்திற்கான விழிப்புணர்வு நடைபயணம்
Advertisement
மதுரை, அக். 10: உலக தபால் தினத்தை முன்னிட்டு, மதுரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. மதுரை கோட்ட அஞ்சல்துறை சார்பில் நடந்த இப்பயணம், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயில் முன்பிருந்து துவங்கி, தெப்பக்குளத்தை சுற்றி வந்தது. இந்த நடைபயணத்தில் மதுரை அஞ்சல் கோட்ட முதன்மை கண்காணிப்பாளர் ரவி ராஜ்வதக். தென்மண்டல தலைமை அஞ்சலக அதிகாரி சரவணன், உதவி இயக்குநர் விஜயகோமதி, விஜயலட்சுமி உதவி கண்காணிப்பாளர்கள் அருணாசலம், ரவிச்சந்திரன், மதுரை முனிச்சாலை அஞ்சலக அதிகாரி முனீ கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடைபயண முடிவில், தியாகராஜர் மாதிரி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
Advertisement