கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருமங்கலம், செப். 10: கள்ளிக்குடி அருகேயுள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் பிச்சை(43). இவரது மனைவி தாமரைசெல்வி(36). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான பிச்சைக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு வந்து மனைவியுடன் மது அருந்து தகராறில் ஈடுபட்டார். மனைவி மற்றும் குழந்தைகள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் கோபித்து கொண்டு அருகேயுள்ள தங்களது பூர்வீக வீட்டில் சென்று படுக்கசென்றார்.
காலை 6 மணிக்கு மனைவி தாமரைசெல்வி மகன் கபிபாலனுடன் சென்று கணவரை இரவு தங்கிய பூர்வீக வீட்டில் சென்று எழுப்ப கதவை தண்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் பிச்சை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சென்று கதவை உடைத்து பிச்சையின் உடலை இறக்கினர். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் பிச்சை உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.