பேரையூர் பகுதியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பேரையூர், செப். 10: பேரையூர் தாலுகா பகுதியிலுள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவாரியாக உள்ளன. அதில் சென்ற வருடம் பயிரிட்ட மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்கள் படைப்புழுத் தாக்குதலால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்பயிர்களுக்காக இன்சூரன்ஸ் மூலமாக இழப்பீடு வழங்க கோரி பல முறை கோரிக்கையிட்டும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், பேரையூர் அரசமரம் பஸ்நிறுத்தம் அருகேவிரைந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தற்போதைய ஆண்டிற்கான இழப்பீடு வழங்க கோரியும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
Advertisement