ஜவுளிக்கடை முன்பு சடலம்
மதுரை, அக்.8: மதுரையில் ஓவியர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை சிம்மக்கல் கருவேப்பிள்ளைக்காரத்தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(52). இவர் ஓவியராக இருந்தார். மனைவியை விட்டு பிரிந்து விளாங்குடியில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
Advertisement
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடை முன்பாக அவர் திடீரென இறந்து கிடப்பதாக மனைவி பாண்டீஸ்வரி(47) என்பவருக்கு தகவல் கிடைத்தது. அவர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement