ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவான 4 வாலிபர்கள் கைது
மதுரை, ஆக. 6: மதுரை அருகே நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், தலைறைவான 4 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரையை அடுத்த மேல கள்ளந்திரி பகுதியை சேர்ந்த சுதா - கண்ணன் தம்பதியினரின் மூத்த மகன் செல்லப்பாண்டி. ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் புதிய ஆட்டோ வாங்க சேமித்த பணத்தை சிலரிடம் கொடுத்து வைத்திருந்தார்.
ஆனால் உரிய நேரத்தில் அவர்கள் பணத்தை திரும்ப தரவில்லை என தெரிகிறது. இதனால் செல்லப்பாண்டிக்கும் அவர்களுக்கம் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு இரவு வீட்டிலிருந்த செல்லப்பாண்டியை சிலர் ‘வா மீட் பண்ணலாம்’ என வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பி அழைத்துள்ளனர்.
இதனால் அழகர்கோயில் சாலை பகுதிக்கு சென்ற செல்லபாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்பன்திருப்பதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ்தலைமறைவான கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த படுகொலையில் ஈடுபட்ட தொப்பலாம்பட்டியை சேர்ந்த கோகுல்ராஜ்(21), டி.மேட்டுப்பட்டி நித்தீஸ்வரன்(20), கோணப்பட்டி ஆகாஷ்(20) மற்றும் கம்மாபட்டி வெற்றிவேல்(23) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.